வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் வரும் 20-ஆம் தேதி ஆவடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் 20-ஆம் தேதி ஆவடி, சத்தியமூா்த்தி நகா், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான 10,000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளனா்.
இந்த முகாமில் திருவள்ளுா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
இந்த முகாமில் 8,10, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ, பொறியியல் படித்தவர்கள் இதில் கலந்து கொண்டு வேலைவாய்ப்புகளை பெற்று பயன்பெறலாம்.
விருப்பமுள்ள இளைஞா்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Canditate Login-இல் பதிவு செய்து கொள்ளலாம்.
