Monday, January 12, 2026

கூகுளின் இந்த புது மாடலுக்கு அதிரடியாக ரூ,13,154 டிஸ்கவுண்ட்..!

கூகுளின் புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, Google Pixel 10 Pro தற்போது அமேசானில் பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த போன் அறிமுகமான போது ரூ.1,09,999 என்ற விலையில் வெளியானது. தற்போது அமேசானில் ரூ.13,154 வரை தள்ளுபடி வழங்கப்பட்டு, வெறும் ரூ.96,845க்கு வாங்க முடிகிறது. இதற்கு கூடுதலாக, எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் கீழ் அதிகபட்சமாக ரூ.43,450 வரை கூடுதல் தள்ளுபடியும் பெற வாய்ப்பு உள்ளது.

அமேசானில் Google Pixel 10 Pro ரூ.98,345க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது. இதில் வங்கி சலுகையாக ரூ.1,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் விலை மேலும் குறைகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த போன் ரூ.1,09,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது கிடைக்கும் இந்த சலுகைகள் காரணமாக, மொத்தமாக ரூ.13,154 வரை நேரடி தள்ளுபடி பெற முடிகிறது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உங்கள் பழைய போனின் நிலை மற்றும் மாடலைப் பொறுத்து மாறுபடும்.

Google Pixel 10 Pro-வின் சிறப்பம்சங்களைப் பார்த்தால், இதில் 6.3 இன்ச் அளவிலான எட்ஜ்-டு-எட்ஜ் LTPO OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1280 x 2856 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 3,300 நிட்ஸ் வரை அதிக பிரைட்னஸ் இதில் உள்ளது. டிஸ்ப்ளே பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 வழங்கப்படுகிறது.

இந்த போன் டென்சர் G5 சிப்செட் மற்றும் டைட்டன் M2 பாதுகாப்பு சிப்புடன் வருகிறது. 16GB வரை ரேம் மற்றும் 256GB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியும் இதில் உள்ளது. 4,870 mAh பேட்டரியுடன் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டும் வழங்கப்படுகிறது.

கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, Google Pixel 10 Pro-வில் மூன்று பின்பக்க கேமராக்கள் உள்ளன. இதில் 50MP வைட் கேமரா, மேக்ரோ ஃபோகஸுடன் கூடிய 48MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 48MP 5x டெலிஃபோட்டோ லென்ஸ் இடம்பெற்றுள்ளன. செல்ஃபிக்காக முன்பக்கத்தில் 42MP கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Related News

Latest News