அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர், ஆன்லைன் திருமண தளத்தை பார்த்து, அதிலிருந்த வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது, திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் போல் நடித்து பழகிய நபர் வர்த்தக வாயிலாக அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார் இதனை நம்பிய பார்த்திபனை ரூபாய் 17,50,000-னை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்து ஏமாற்றி உள்ளார்.
இது குறித்து பார்த்திபன் அரியலூர் மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் காட்டாதுறை, கல்குளத்தைச் சேர்ந்த அசார் என்பவர் பெண் போல பேசி ஏமாற்றியது தெரியவந்தது. இதனையடுத்நு அசாரிடமிருந்து இரண்டு செல்போன்-02, மூன்று சிம் கார்டுகள் ரூ.2700 ஆகியவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
