புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள தனியார் மதுபான கடையை கடந்த 4 ஆம் தேதி இரவு மர்ம நபர் உடைத்து, கல்லா பெட்டியில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை திருடிச்சென்றார். இது குறித்து கடை காசாளர் லட்சுமணன் அளித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் திருட்டு வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஒருவர் பிச்சைக்காரர் போல் கையில் பையுடன் நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அவர், தஞ்சை மாவட்டம், நடுக்காவேரி, திருக்காட்டுபுலியூர் பகுதியைச்சேர்ந்த மனோகர் என்பதும் தெரியவந்தது. அதனையடுத்து, போலீசார் தஞ்சைக்கு சென்று மனோரை கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து 1.31 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டது.