Wednesday, December 17, 2025

நின்று கொண்டிருந்த கார் மீது மோதிய அரசு பேருந்து., நொறுங்கிய கார்

கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே உள்ள ஆவட்டி கல்லூர் சர்வீஸ் சாலையில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் மீது அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதியதில், அந்த கார் சுக்குநூறாக நொறுங்கி தூக்கி வீசப்பட்டது.

பேருந்தின் வேகம் அதிகமாக இருந்ததால், கார் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு முழுமையாக சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, விபத்து நடந்த நேரத்தில் காரில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. காரில் பயணித்தவர்கள் சில நிமிடங்கள் முன்பே தேனீர் கடைக்கு சென்றுள்ளனர். இதனால், பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து துறை போலீசார் அரசு பேருந்து மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News