செல்போன் நம்பரை பிளாக் செய்த காதலனை கத்தியால் குத்திக்கொன்ற காதலி

சத்தீஸ்கர் மாநிலத்தில், தனது செல்போன் எண்ணையும் சமூக வலைதளங்களையும் பிளாக் செய்த காதலனை, காதலி கத்தியால் மார்பில் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பிரசாத் (25), குற்றம் சாட்டப்பட்டவர் ரோஷினி (22). இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி, பழகி வந்த நிலையில் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், சமீப காலமாக பிரசாத் திடீரென ரோஷினியுடன் பேசுவதை நிறுத்தியதுடன், தனது செல்போன் எண்ணையும் அனைத்து சமூக வலைதளங்களிலும் அவரை பிளாக் செய்துள்ளார்.

இதனால், பிரசாத் தன்னை விட்டு விலகி வேறு ஒரு பெண்ணுடன் பழக ஆரம்பித்துவிட்டார் என்ற சந்தேகம் ரோஷினிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த ரோஷினி கத்தியை எடுத்துக்கொண்டு பிரசாத் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ரோஷினி தன்னிடம் இருந்த கத்தியால் பிரசாத்தின் மார்பில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் ரோஷினியை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News