Wednesday, January 22, 2025

விண்வெளியில் முதல் முறையாக பூத்த பூ…! என்ன பூ தெரியுமா….?

நாசா விஞ்ஞானிகள் 1970 -களில் இருந்தே விண்வெளியில் தாவரங்களை வளர்க்க ஆய்வு செய்து வருகின்றனர்.

சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் நீண்ட கால பயணங்களில் மனிதர்கள் தங்கள் சொந்த உணவைப் பயிரிட வேண்டும் என்ற நோக்கில் விண்வெளியில் தாவரங்கள் எவ்வாறு வளர்ப்பது என்பதை 2015-ல் நாசாவின் விண்வெளி வீரர் `ஜெல் லிண்ட்கிரென்’ என்பவரால் பரிசோதனை முயற்சி  தொடங்கப்பட்டது.

நாசா விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் கீரை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும்  மிளகு போன்றவற்றையும் பயிரிட்டுள்ளனர். இந்த ‘ஜின்னியா’ சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள காய்கறி வளர்க்கும் இடத்தின் ஒரு பகுதியாகச் சுற்றுப்பாதையில் வளர்க்கப்பட்டது.

இந்த விண்வெளித் தோட்டம் வெறும் காட்சிக்காக மட்டும் அல்ல, சுற்றுப்பாதையில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதையும், பூமியிலிருந்து கொண்டு வரும் பயிர்களை எவ்வாறு வளர்ப்பது என்பதையும் புரிந்துகொள்ள உதவுகிறது. தற்போது ஜின்னியா மலர் வெளிர் – ஆரஞ்சு நிற இதழ்களோடு முழுமையாக மலர்ந்துள்ளது.விண்வெளி நிலையத்தில் முதன்முறையாக ஒரு பூ மலர்ந்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest news