இந்திய அணியில் ஆட வேண்டும் என்ற இளம்வீரர்களின் கனவில், சுடுதண்ணியை ஊற்றுவதில் BCCIக்கு நிகர் யாருமில்லை. BCCIயின் உள்குத்து வேலைகளால் திறமை இருந்தும், எக்கச்சக்க வீரர்கள் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
BCCIயின் இந்த உள்ளடி வேலைகளுக்கு சில நேரம் நட்சத்திர வீரர்களும் பலியாவதுண்டு. இதற்கு எடுத்துக்காட்டாக ரோஹித் சர்மா, அஸ்வின், விராட் கோலி ஆகியோரை சொல்லலாம். அவர்களின் விஷயத்தில், BCCI எப்படி நடந்து கொண்டது? என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த லிஸ்டில் ஷ்ரேயாஸ் அய்யரும் தற்போது இணைந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல சராசரி வைத்திருக்கும் அவருக்கு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்கவில்லை. ஷ்ரேயாஸைக் காட்டிலும் குறைந்த சராசரி வைத்திருக்கும் ருதுராஜ், சாய் சுதர்சன் ஆகியோருக்கு எல்லாம் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால் ஷ்ரேயாஸ் BCCIயால் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருகிறார். இந்தநிலையில் BCCIக்கு தகுந்த பதிலடியாக, ஷ்ரேயாஸ் மிகப்பெரும் சாதனை ஒன்றை IPL தொடரில் படைத்துள்ளார். அவரின் தலைமையின் கீழ் 11 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணி, Play Off சான்ஸை உறுதி செய்துள்ளது.
இதன்மூலம் IPL தொடரில் டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் என, 3 அணிகளை Play Offக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன், என்னும் வரலாற்று சாதனையை ஷ்ரேயாஸ் படைத்துள்ளார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல இந்த சாதனையால், ஸ்ரேயாஸின் கேப்டன் திறமையும் வெளிப்பட்டுள்ளது.
இதைப்பார்த்த ரசிகர்கள், ” இதுக்கு மேலயும் அவர டீம்ல எடுக்காம இருந்தா, அது உங்களுக்குத்தான் அசிங்கம்,” என்று சமூக வலைதளங்களில் BCCIஐ கழுவி ஊற்றி வருகின்றனர்.