பெரியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாள் தினத்தை ‘சமூக நீதி நாள்’ ஆக தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டில் அறிவித்திருந்தது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தந்தை பெரியார் – இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு! தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி! தந்தை பெரியார் என்றும் – எங்கும் நிலைத்திருப்பார்!” எனப் பதிவிட்டுள்ளார். இதனுடன் AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
