சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில், நள்ளிரவில் ஏசி வெடித்து தீ விபத்தான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவிலம்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, வீட்டின் படுக்கை அறையில் இருந்த ஏசி நள்ளிரவில் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தினர் நல்வாய்ப்பாக அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், படுக்கறையில் இருந்த அனைத்து பொருள்களும் தீக்கிரையாகி சேதமடைந்தன. பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
