Wednesday, December 17, 2025

அம்பத்தூரில் காவல் பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை

சென்னை அம்பத்தூர் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அந்தோணி மாதா (30). இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு யோவான் என்பவருடன் திருமணமாகி ஹரிஷ் ஜோஸ்வா (10), ஆடன் ஜெபிக் (8) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து அம்பத்தூர் அடுத்த சோழபுரம் பகுதியில் வசித்து வந்த அந்தோணி மாதா, மீஞ்சூர் காவல் நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமார் என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ரஞ்சித்துகுமாரை வீட்டிற்கு வருமாறு அந்தோணி மாதா அழைத்ததாகவும், அதற்கு ரஞ்சித் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி மாதா ரஞ்சித் குமாருக்கு வீடியோ கால் செய்து தூக்கிக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த ரஞ்சித் குமார் உடனே அம்பத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்தோணி மாதா வீட்டிற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்த அந்தோணி மாதாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related News

Latest News