குடியாத்தம் அருகே, குடிபோதையில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்த நபர், அதே பாம்பு கடித்து உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதியில் சாலை ஓரம் நேற்று இரவு கொடிய விஷம் கொண்ட கண்ணாடிவிரியன் பாம்பு ஒன்று சென்றுள்ளது. அப்போது, அந்த பகுதியில் குடிபோதையில் நடந்து வந்து கொண்டிருந்த காமாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர், அந்த கண்ணாடி வீரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்துள்ளார்.
அப்போது அந்த பாம்பு, அவரை பலமாக கடித்துள்ளது. இதில் வலியால் துடித்த தேவராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தேவராஜுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.