ஓடிப்பிடித்து விளையாடும் நாயும் பன்றியும்

141
Advertisement

நாயும் பன்றியும் ஓடிப்பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.

பொதுவாக, பன்றியைக் கண்டால் நாய்கள் விரட்டிவிரட்டிக் கடிக்க முற்படும். அதனால்,
நாய்களைக் கண்டாலே பன்றிகள் தலைதெறிக்க ஓடத்தொடங்கும். ஆனால், அதற்கு மாறாக
நீண்டகால நண்பர்களைப்போல ஒரு நாயும் ஒரு பன்றியும் ஓடிப்பிடித்து விளையாடி வருகின்றன.
இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்துவருகிறது.

ஜென்னி என்ற பெண்மணி தனது வீட்டில் பெப்பர் என்று பெயரிட்ட ஒரு கருப்பு பன்றிக்
குட்டியையும் பெப்பர் என்று பெயரிடப்பட்ட ஒரு நாய்க்குட்டியையும் வளர்த்துவருகிறார்.
சமீபத்தில் ஒருநாள் ஜென்னி ஷாப்பிங் செய்வதற்காக சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தார்.

Advertisement

தங்கள் எஜமானர் வீட்டில் இல்லையென்பதை அவையிரண்டும் தெரிந்துகொண்டன போலும்….
உடனே வீட்டைவிட்டு வெளியேறி ஒரு பூங்காவுக்குள் சென்று உற்சாகமாக விளையாடத்
தொடங்கின. ஏதோ நீண்டகால நண்பர்கள்போல ஆரவார மகிழ்ச்சித் துள்ளலோடு அன்றைய
பொழுதை இனிமையாக்கின.

ஜென்னி ஷாப்பிங் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது பரம எதிரிகளாகக் கருதப்படும்
பன்றியும் நாய்க்குட்டியும் ஓடிப்பிடித்து விளையாடுவதைக் கண்டு பூரித்துப்போனார்.

அந்த அற்புதமானக் காட்சியைப் படம்பிடித்த அவர் யூடியுபில் பதிவேற்றினார். அந்த வீடியோவை
ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.