இந்தியாவுக்கு ‘பேரிடி’! ரஷ்யா மற்றும் ஈரானுக்கு செக் வைத்த அமெரிக்கா!

அமெரிக்கா எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு, இந்தியாவின் எரிசக்தித் தேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்குவதற்காக வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முடிவு, உலக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சலுகைகள் இனிமேல் நீட்டிக்கப்படாது என அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெஸ்ஸன்ட் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மார்ச் 11-ஆம் தேதிக்கு முன்பே கப்பல்களில் ஏற்றப்பட்ட எண்ணெயை வாங்குவதற்காக மட்டுமே இந்த 30 நாள் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது என்றும், அந்த காலகட்டம் தற்போது முடிந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு போர் வெடித்தபோது, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களைத் தாண்டி ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அப்போது, விலையைக் கட்டுக்குள் கொண்டுவரவே இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த தற்காலிக சலுகையை அமெரிக்கா வழங்கியது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் சுமார் 30 மில்லியன் பேரல் ரஷ்ய எண்ணெய்க்கான ஆர்டர்களை வழங்கியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் கூட, மீண்டும் ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கின.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் இந்தச் சலுகையை நீட்டிக்க வேண்டும் என்று கடுமையாக அழுத்தம் கொடுத்த போதிலும், அமெரிக்கா அதனை நிராகரித்துள்ளது. ஆனால், இந்தச் சலுகை அமெரிக்காவிற்குள்ளேயே பெரும் புயலைக் கிளப்பியது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு, உக்ரைன் மீது கொடூரமான போரைத் தொடர ரஷ்யாவுக்கு நிதியுதவி செய்வதைப் போன்றது என்றும், அமெரிக்கப் படைகளைக் குறிவைக்க ஈரானுக்கு உதவுவதாகவும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் கடுமையாக விமர்சித்தனர். புடினின் போர் இயந்திரத்திற்கு அமெரிக்கா மேலும் வலுவூட்டக் கூடாது என அவர்கள் கொடுத்த தொடர் அழுத்தமே, இந்த சலுகை ரத்து செய்யப்பட்டதற்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Related News

Latest News