13 வயது சிறுமியின் கால் எலும்பை உடைத்து பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன்

காஞ்சிபுரம் அருகே அரசு காப்பகத்தில் மர்ம நபர் 13 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கால் எலும்பை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிட்லப்பாக்கம் அடுத்த ஜட்ஜ் காலணியில் செயல்படும் அரசு சமூக நலத்துறை சார்பில் செயல்படும் பெண்கள் காப்பகத்தில் 13 வயது சிறுமி எலும்பு முறிவுடன் அழுது கொண்டிருந்த நிலையில், நிர்வாகத்தினர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது. தான் தூங்கிக் கொண்டிருந்தபோது முகத்தில் துணியால் அழுத்திய நபர் மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், தனது காலை உடைத்ததாகவும் அச்சிறுமி மருத்துவரிடம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார.

இதனையடுத்து, மேல் சிசிச்சைகாக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அப்பெண்ணுக்கு கூடுதல் பரிசோதனைகள் செய்யவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே வேளையில், சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணியில் இருந்த மேத்திவ் என்ற தனியார் நிறுவன காவலாளியை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related News

Latest News