மோசடி வழக்குகளில், 11 ஆண்டாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த கேரள மாநிலத்தவர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.
கேரள மாநிலம், மலப்புரம் அருகே உள்ள திருரங்காடி பகுதியை சேர்ந்தவர் அப்துல் பஷீர். இவர் மீது 11 ஆண்டுக்கு முன்பு திருரங்காடி காவல் நிலையத்தில் நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடி வழக்குகள் பதிவாகின. அவரை போலீசார் தேடியபோது, அவர் போலீசில் சிக்காமல், வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமுறைவானர். அதனால், அப்துல் பஷீரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்த மலப்புரம் காவல் ஆணையர், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அவர் மீது எல்ஓசி போட்டார்.
இந்நிலையில், சார்ஜாவில் இருந்து நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்துபோது, 11 ஆண்டாக தலைமறைவாக இருந்த அப்துல் பஷீர் சார்ஜாவில் இருந்து சென்னை வந்தது தெரிய வந்தது. அதனையடுத்து, அப்துல் பாஷீரை வெளியே விடாமல் பிடித்து, விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அதோடு, மலப்புரம் காவல் ஆணையருக்கும் தகவல் தெரிவித்தனர்.