சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி ஆர்.எஸ். பகுதியில் குழந்தைகள் பயன்பாட்டிற்காக 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா கட்டப்பட்டு 4 ஆண்டுக்கு முன்பு பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது. இங்கு மாலை நேரத்தில் சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் சென்று விளையாடி மகிழ்ந்து வந்தனர்.
இந்த பூங்கா கடந்த ஒரு ஆண்டாக பராமரிப்பின்றி புற்கள் முளைத்து, குடிநீர் குழாய் சேதமடைந்து பயன்பாடின்றி கிடப்பதாக தெரிகிறது. மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்தும் கூடாரமாக பூங்கா மாறிவருவதாக கூறப்படுகிறது.
இதனால், வேதனையடைந்துள்ள அப்பகுதி மக்கள், பேரூராட்சி நிர்வாகம் பூங்காவை பராமரித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.