Tuesday, February 17, 2026

ஜாமீனில் வெளிவர முடியாதபடி அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. அங்கு அல்லு அர்ஜுன் வர உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். இதில், 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகனும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் முன்னறிவிப்பின்றி அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட கூட நெரிசலே உயிரிழப்புக்கு காரணம் எனவும் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு உட்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related News

Latest News