விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நாகலாபுரம் பகுதியில் கிடங்கல் ஏரி நிரம்பி உபரி நீர் செல்லும் ஓடையில் பாலம் அமைந்துள்ளது.
இந்த பாலம் கடந்த ஆண்டு மழையின் பொழுது மழை நீரில் சேதம் அடைந்தது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் செல்வதற்கு மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் நகராட்சி சார்பில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி கட்டப்பட்டு நிறைவு பெற்றது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில், கிடங்கல் ஏரியிலிருந்து உபரி நீர் அந்த ஓட வழியாக செல்கிறது.
இதனால் லேசான தண்ணீர் செல்வதற்கே தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த பாலம் உள் வாங்கி அதிக அளவில் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். உடனடியாக தற்காலிக பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
