பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து தற்போது ‘டியூட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார்.
இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அந்த படத்திற்கு பெரிய சிக்கல் வந்துள்ளது. இப்படத்தின் டைட்டில் தன்னுடையது என நடிகரும் இயக்குனருமான தேஜ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஒரு வருடத்திற்கு முன்பே ‘டியூட்’ படத்தை அறிவித்து விட்டோம். மைத்திரி மூவி மேக்கர்ஸ் அவர்களின் படத்திற்கு எங்கள் பெயரை வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கால் பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.