நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும், ஆவின் பாலகத்துக்குள் புகுந்த கரடி ,
பால், நெய் உள்ளிட்ட பொருட்களை ருசி பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆவின் பாலகத்துக்குள் கரடி புகுந்து, பால் பொருள்களை ருசி பார்த்த நிலையில், இதன் வீடியோ சுற்றுவட்டார மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
மக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றி திரியும் கரடியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
