சமீப காலங்களாக அரசு பள்ளியில் நடந்த மாணவர்கள் வகுப்பறை மற்றும் கழிவறையை சுத்தம் செய்வது,ஆசிரியர்களுக்கு பணிவிடை செய்வது இது போன்றவற்றைக்கு கல்வித்துறையில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது..ஆனால் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், பொதுமக்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
அதாவது, மத்தியப் பிரதேசத்தின் போபாலில், காந்திநகர் அரசு மகாத்மா காந்தி மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது.. இந்த நிலையில்,சம்பவத்தன்று ஆசிரியை நாற்காலியில் அமர்ந்து, கால்களை மற்றொரு நாற்காலியில் வைத்திருந்தார். அப்போது 4ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் அவரது பாதத்தை மசாஜ் செய்த காட்சி வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனால், சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் கிளப்பியுள்ளது.
இதை குறித்து ஆசிரியை கொடுத்த விளக்கம்..இந்த குற்றச்சாட்டை மறுத்த ஆசிரியை, பள்ளி வாசலில் உடைந்த ஓடு குழியில் கால் வைத்ததால் காயமடைந்ததாகவும், மாணவர்கள் உதவி செய்து தன்னை நாற்காலியில் அமரவைத்ததாகவும் விளக்கம் அளித்ததாக சொல்லப்படுகிறது. மேலும், ஒரு மாணவர் ஒருவர் பாசத்தால் தனது பாதத்தை மசாஜ் செய்ததாக அவர் கூறினார். ஆனாலும், இது ஆசிரியர்களின் நடத்தை தொடர்பாக பல்வேறு விமர்சங்களை எழுப்புகிறது…
மாநில அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் நடத்தை, அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் வகுப்பறை வசதிகள் குறித்த புகார்கள் அடிக்கடி வரும் நிலையில், இந்த சம்பவம் கல்வித் துறையின் தரம் மற்றும் பொறுப்பை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.