Wednesday, December 17, 2025

ஹெல்மெட்டில் இருந்த 4 அடி நீளமுள்ள பாம்பு., மக்களே உஷார்..!

கோவை, கொடிசியா அருகே உள்ள லூலு மால் waer house பார்க்கிங்கில் புல்லட் வாகனம் நின்று கொண்டு இருந்தது. அந்த வாகனத்தில் பக்கவாட்டில் ஹெல்மெட் தொங்கவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் வந்த நல்ல பாம்பு, அந்த ஹெல்மெட்டுக்குள் புகுந்துள்ளது. இருசக்கர வாகன உரிமையாளர் சங்கர் திடீரென்று பார்த்த பொழுது உள்ளே பாம்பு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக பாம்பு பிடிக்கும் வீரருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்து அவர் லாபகமாக அந்த 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவையில் காலை, வேளையில் மிகவும் குளிராக இருப்பதால் மிதமான வெப்பத்தை தேடி இது போன்ற பாம்புகள் வருகிறது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே பொதுமக்கள் ஹெல்மெட் போடும் பொழுது நன்றாக கவனித்து விட்டு போட வேண்டும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Related News

Latest News