Wednesday, March 26, 2025

குஜராத்தில் சாக்கடை குழாயில் விழுந்த 2 வயது சிறுவன்

குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள கிராமத்தில், திறந்திருந்த பாதாள சாக்கடையில் 2 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளான். அவனை உறவினர்கள் மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததால், மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், பாதாள சாக்கடை குழாயில் விழுந்த 2 வயது சிறுவனை மீட்கும் பணி, 7 மணிநேரத்திற்கும் மேல் நீடித்து வருகிறது. 70 பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சூழலில், 100 முதல் 150 மீட்டர் வரை தேடி விட்டோம் என்றும் சிறுவன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்ல எனவும் தலைமை மீட்பு படை அதிகாரி பசந்த் பரிக் தெரிவித்துள்ளார்.

Latest news