கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமிக்கு 25 வயது இளைஞருடன் 2 நாட்களுக்கு முன்பு கோயில் ஒன்றில் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிறுமி தாலிக்கயிறுடன் பள்ளிக்கு வந்துள்ளார். இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக குழந்தைகள் நல அலுவலகம், சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், விசாரணை நடத்தி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரில் பேரில் சிறுமியின் பெற்றோர், திருமணம் செய்த தச்சு தொழிலாளி அவரது பெற்றோர் என மொத்தம் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.