நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெற உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று பிற்பகல் 2 மணிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் சந்திக்க உள்ளனர்.
இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியது தவறான முடிவு என பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வரும் நிலையில், செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளப் பதிவில், “அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நாம் விட்டுச் சென்றது வெறும் பாலைவனம் அல்ல, அது ஒரு செழிப்பான சோலைவனம்” என்றும் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினை சந்திக்க உள்ள நிலையில், இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
