தங்கம் விலையில் திடீர் மாற்றம்… ஒரே நாளில் அதிரடி வீழ்ச்சி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது.

கடந்த 16 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.15,360 வரை விலை குறைந்தது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று (நவம்பர் 24) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 உயர்ந்து ரூ.11,715 ஆகவும், சவரனுக்கு ரூ.920 அதிகரித்து ரூ.93,720 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாகக் குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.11,420 ஆகவும், சவரனுக்கு ரூ.2,360 சரிந்து ரூ.91,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு நாட்களில் உயர்ந்த விலையைவிட இன்று ஏற்பட்ட சரிவு அதிகமாக உள்ளது.

அதேபோல், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.9,345 ஆகவும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.74,760 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.165 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,65,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் நகை வாங்கத் திட்டமிட்டுள்ள மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

Related News

Latest News