தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் லட்சக்கணக்கான ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டில் கேஒய்சி புதுப்பித்தல், பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை எளிதாக முடிப்பதற்காக தமிழக அரசு சிறப்பு குறைதீர் முகாம்களை நடத்துகிறது.

அதன்படி, வரும் நவம்பர் 14-ம் தேதி சனிக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் அட்டை குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

இந்த முகாமில் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்த்தல் அல்லது நீக்குதல், முகவரி மாற்றம், தொலைபேசி எண்ணை புதுப்பித்தல் மற்றும் கேஒய்சி உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியும்.

சென்னையைப் பொறுத்தவரை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும் முகாம் நடைபெறுகிறது.

குறிப்பாக, இதுவரை கேஒய்சி புதுப்பிக்காத அரிசி அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கான அங்கீகாரச் சான்றும் வழங்கப்படும்.

மகளிர் உரிமைத்தொகை, பொங்கல் பரிசு உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களைப் பெற ரேஷன் அட்டை முக்கிய ஆவணமாக இருப்பதால், அதிலுள்ள விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எனவே, ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டியவர்கள் இந்த முகாமை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Related News

Latest News