வரும் நவம்பர் 6-ஆம் தேதி தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தங்கம் வாங்குவது மங்களகரமானது என மக்கள் கருதுவதால் தங்க நகைகளின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து, நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளியும் கொண்டபடுகிறது. தீபாவளிக்கு தங்க நகை வாங்கச் செல்பவர்கள் நகைக்கடையில் பில் போடும்போது சில முக்கிய விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
தங்க நகைகளின் விலையில் தங்கத்தின் அடிப்படை விலையுடன் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி மற்றும் ஹால்மார்க்கிங் கட்டணம் ஆகியவை சேர்க்கப்படும்.
செய்கூலி, சேதாரம் ஏன் வசூலிக்கப்படுகிறது?
செய்கூலி என்பது நகையை வடிவமைத்து உருவாக்குவதற்கான கட்டணமாகும். இது கடைக்கு கடை மற்றும் நகையின் டிசைனைப் பொறுத்து மாறுபடும். அதேபோல், நகை தயாரிப்பின்போது ஏற்படும் தங்க இழப்புக்கான கட்டணமே சேதாரம் எனப்படுகிறது.
22 கேரட் தங்கத்தின் தூய்மை 91.6 சதவீதமாகும். எனவே நகை வாங்கும்போது அதன் நிகர எடையையும் தூய்மையையும் சரிபார்க்க வேண்டும்.
மேலும், தங்க நகைகளுக்கு 3 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
நகை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:
- செய்கூலி மற்றும் சேதாரக் கட்டணங்களை ஒப்பிடுங்கள்.
- கற்கள், முத்துக்களின் எடையைத் தவிர்த்து தங்கத்தின் நிகர எடையைச் சரிபாருங்கள்.
- 916 ஹால்மார்க் முத்திரையை உறுதிப்படுத்துங்கள்.
- ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் பில்லில் சரிபாருங்கள்.
- பழைய நகைகளை மாற்றும்போது எக்ஸ்சேஞ்ச் மற்றும் பைபேக் விதிமுறைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
இவற்றைக் கவனித்தால் பண்டிகைக் காலத்தில் தங்க நகைகளை வாங்கும்போது தேவையற்ற கூடுதல் செலவுகளைத் தவிர்க்கலாம்.
