முதல்வரான பிறகு முதல் முறையாக… கல்வி விருது விழா … வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழா நாளை (நவம்பர் 5) சென்னையில் நடைபெற உள்ளது. இதனை தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சித் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய், ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களை நேரில் அழைத்து விருதுகள் வழங்கிப் பாராட்டி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், முதற்கட்டமாக 30 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

நாளை காலை 11 மணிக்கு மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு மதிய உணவு வழங்கப்படும். பின்னர் மதியம் 2 மணியளவில் மாணவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி முதலமைச்சர் விஜய் பாராட்ட உள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற இந்தக் கல்வி விருது வழங்கும் விழா, தற்போது நான்காவது ஆண்டாக நடைபெறுகிறது. முதலமைச்சரான பிறகு விஜய் முதன்முறையாக இந்த விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு விருதுகளை வழங்க உள்ளதால் மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related News

Latest News