தமிழ்நாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்றாகும். இந்நாளில் மக்கள் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம்.
நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. வார விடுமுறை நாளில் தீபாவளி வருவதால், அதற்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் விடுமுறை கிடைக்குமா என்று பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9ஆம் தேதி திங்கட்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
