மாணவர்களுக்கு ஜாக்பாட்!! தீபாவளிக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்குமா?

விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சிதான். அதிலும் தொடர் விடுமுறை கிடைத்தால் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது. சமீபத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறை எனத் தொடர் விடுமுறையை அனுபவித்தவர்கள், தற்போது தீபாவளி விடுமுறையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. தீபாவளி நாளில் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்வதால், விடுமுறை நாட்களைத் திட்டமிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9ஆம் தேதி திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் பணியிடங்களுக்குத் திரும்புவதில் ஏற்படும் சிரமம் மற்றும் அமாவாசை நோன்பு அனுசரிப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இதுகுறித்து பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நவம்பர் 9ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. விடுமுறை அறிவிக்கப்பட்டால், வார இறுதியுடன் சேர்த்து பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அரசின் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Related News

Latest News