X தளத்தில் ‘1’ லைக் போட்டா ஒரு டாலர்? எலான் மஸ்க் கொண்டு வந்த செம்ம அப்டேட் !

உலகப் புகழ்பெற்ற சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில், இதுவரை இல்லாத வகையில் ஒரு மாபெரும் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வரப்போவதாக எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.

பொதுவாக நாம் ஒரு போஸ்ட் பிடித்திருந்தால், அதில் வெறும் லைக் பட்டனை மட்டும் தான் அழுத்துவோம். ஆனால், இனி அந்த லைக் பட்டனை நீண்ட நேரம் அழுத்திப் பிடித்தால், அந்தப் பதிவை போட்ட நபருக்கு உங்களால் நேரடியாக ஒரு டாலர் பணத்தை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹94.98 ரூபாயை அனுப்ப முடியும்.

இதற்காக ‘எக்ஸ் மணி’ என்ற புதிய கட்டண வசதியை அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம், எக்ஸ் தளத்தில் வீடியோக்கள் மற்றும் பதிவுகளை போடும் கிரியேட்டர்களுக்கு அவர்களது ரசிகர்கள் நேரடியாகப் பணத்தை வழங்கி அவர்களை ஊக்குவிக்க முடியும்.

ட்விட்டரை சமூக வலைதளம், மெசேஜ் மற்றும் பணப் பரிவர்த்தனை என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்டமான “எவ்ரிதிங் ஆப்”-ஆக மாற்ற வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் நீண்ட நாள் கனவின் முதல் படியே இந்த புதிய லைக் பட்டன் பேமெண்ட் வசதியாகும்.

இந்த வசதி மட்டும் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தால், வாட்ஸ்அப் மற்றும் கூகுள் பே போன்ற முன்னணி பணப்பரிவர்த்தனை ஆப்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக அமையும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

தற்போது அமெரிக்காவில் மட்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த எக்ஸ் மணி சேவையின் மூலம், பயனர்கள் ஒருவருக்கொருவர் பணத்தை அனுப்பிக் கொள்வதோடு மட்டுமின்றி, ‘எக்ஸ் விசா டெபிட் கார்டையும்’ பெற முடியும்.

இந்த விசா கார்டை பயன்படுத்தி நீங்கள் கடைகளிலும், ஆன்லைனிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மேலும், இந்த கார்டை ஆப்பிள் பே-உடன் இணைத்து காண்டாக்ட்லெஸ் பேமெண்ட் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பணப் பரிவர்த்தனைகளையும் மிக எளிதாக்கும் வகையில் இந்த எக்ஸ் மணி சேவை உருவாக்கப்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நாடான இந்தியாவில், இந்த வசதி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து எலான் மஸ்க் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இந்திய நெட்டிசன்கள் மத்தியில் இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Related News

Latest News