இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர் 2. இப்படம் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வட இந்தியா மற்றும் வெளிநாடுகள் எனப் பல்வேறு பகுதிகளிலும் ரஜினிகாந்த் ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
ஜெயிலர் 2 திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் முதல் நாளிலிருந்தே திரையுலகில் கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில், படம் வெளியாகி ஏழு நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜெயிலர் 2 திரைப்படம் ஏழு நாட்களில் உலகளவில் ரூ.580 கோடி வசூல் செய்துள்ளது. ஒரே வாரத்தில் இவ்வளவு பெரிய வசூலைப் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இப்படம் விரைவில் ரூ.800 கோடி வசூலைக் கடக்கும் என்றும், பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனைகளைப் படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
