சன் டிவி குழுமத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் மற்றும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் திருமணம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
காவ்யா மாறன் மற்றும் அனிருத் திருமணம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்தத் திருமணம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனால், திருமணம் குறித்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
வெளிநாட்டில் திருமணம் நடைபெற்றாலும், சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, திருமண வரவேற்புக்கான அழைப்பிதழை கலாநிதி மாறன் குடும்பத்தினர் தெலுங்கானா முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளனர். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
