தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 12-ஆம் தேதி தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.1,10,720-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.13,840-க்கும் விற்பனையானது. மாலையில் மீண்டும் சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,09,760-க்கும், கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.13,720-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து, 13-ஆம் தேதி சவரனுக்கு ரூ.280-ம், 14-ஆம் தேதி ரூ.760-ம் தங்கம் விலை குறைந்தது. அதன்பிறகு, சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,08,120-க்கு விற்பனையானது. நேற்று விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.13,535-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,08,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையில், வெள்ளி விலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.40 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
