வார தொடக்கத்தில் தங்கம் விலையில் மாற்றம்… இன்றைய நிலவரம்!!!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 5-ந்தேதி தங்கம் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும், ஒரு கிராம் ரூ.13,675-க்கும் விற்பனையானது. 6-ந்தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்தது. தொடர்ந்து 7-ந்தேதி சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது. 8-ந்தேதி விலையில் மாற்றமில்லை. 9-ந்தேதி சவரனுக்கு ரூ.840-ம், 10-ந்தேதி ரூ.520-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,040-க்கு விற்பனையானது.

இந்நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.1,10,720-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.13,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே, வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News