01.10.2026; தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம் இதோ…

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 28-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,09,320-க்கும், ஒரு கிராம் ரூ.13,665-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 29-ந்தேதி சவரனுக்கு ரூ.200 மற்றும் கிராமுக்கு ரூ.25 குறைந்து, சவரன் ரூ.1,09,120-க்கும், கிராம் ரூ.13,640-க்கும் விற்பனையானது.

இதையடுத்து நேற்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1,09,680-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,710-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.1,09,440-க்கும், ஒரு கிராம் ரூ.13,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News