ChatGPT-ல் வந்த செம்ம ‘அப்டேட்’! இனி கோடிங் முதல் கஸ்டமர் கேர் வரை எல்லாமே இது தான்!

உங்களுக்காக கம்ப்யூட்டரில் எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டு, நீங்க தூங்கிக் கொண்டிருக்கும்போது கூடப் பின்னணியில் தொடர்ந்து செயல்படும் ஒரு ‘பர்சனல் அசிஸ்டென்ட்’ (Personal Assistant) இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு மிரளவைக்கும் புதிய தொழில்நுட்பத்தை ‘சாட் ஜி.பி.டி டாட்ஸ்’ (ChatGPT Dots) என்ற பெயரில் ஓபன் ஏ.ஐ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது!

சாட் ஜி.பி.டி-க்கு இதுவரை நாம் என்ன கட்டளை கொடுக்கிறோமோ, அதை மட்டுமே அது செய்யும். அடுத்த வேலைக்கு மீண்டும் நாம் புதிதாக ஒரு கட்டளையைக் கொடுக்க வேண்டும். ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ‘சாட் ஜி.பி.டி டாட்ஸ்’ என்பது மனிதர்களைப் போலவே சுயமாகச் சிந்தித்து பல வேலைகளைத் தொடர்ந்து செய்யக்கூடிய ஒரு ‘ஏ.ஐ ஏஜென்ட்’ (AI Agent) ஆகும். ஒரு வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று நீங்கள் ஒருமுறை சொல்லிவிட்டால் போதும். நீங்கள் அந்த விண்டோவை விட்டு வெளியேறினாலும், பின்னணியில் அந்த வேலையை அது முழுமையாக முடித்துவிட்டு உங்களுக்கு ரிப்போர்ட் செய்யும்.

இந்த ஏ.ஐ-க்குத் தனியாக ஒரு கிளவுட் கம்ப்யூட்டர் மற்றும் பிரவுசர் கொடுக்கப்பட்டுள்ளதால், ஒரே நேரத்தில் சுமார் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்களை (Apps) இதால் இயக்க முடியும். உதாரணமாக, சாப்ட்வேர் கோடிங் (Coding) எழுதுவது, வாடிக்கையாளர்களின் ஃபீட்பேக்குகளை (Feedback) சேகரிப்பது, டேட்டாக்களை வைத்துப் புதிய ரிப்போர்ட் தயார் செய்வது எனப் பல கடினமான வேலைகளை இது நொடிப்பொழுதில் செய்துவிடும். வீடியோ கிரியேட்டர்கள் தங்களின் வீடியோக்களைக் கொடுத்தால், எந்தெந்த பகுதிகளை ஷார்ட்ஸாகப் (Shorts) போடலாம் என்று கண்டுபிடித்து, அதற்குத் தேவையான சோசியல் மீடியா போஸ்டுகளையும் இதுவே தயார் செய்துவிடும்.

அதேபோல, நீங்கள் ஸ்விக்கி, சொமாட்டோ ஆப்களில் உணவு ஆர்டர் செய்யச் சொன்னால், எந்த கடையில் விலை குறைவாக இருக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு, கடைசியாக உங்கள் அனுமதியைப் பெற்று அதுவே உணவை ஆர்டர் செய்துவிடும். நீங்கள் நேரடியாக மட்டுமில்லாமல் மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Microsoft Teams) அல்லது ஸ்லாக் (Slack) வழியாகவும் இதனைப் பயன்படுத்தலாம். குரல் வழியிலும் இதற்கு நீங்கள் கட்டளைகளை வழங்கலாம்.

இந்த ஏ.ஐ உங்களின் லேப்டாப்பில் உள்ள எந்தப் கோப்புகளையும் தானாகத் திறக்க முடியாது. பாஸ்வேர்டு மாற்றுவது போன்ற மிக முக்கியமான வேலைகளுக்கு, இது கட்டாயம் உங்களின் அனுமதியைக் கேட்கும். ஒருவேளை நீங்கள் கொடுத்த வேலையை அது தவறாகச் செய்யத் தொடங்கினால், அதை முன்கூட்டியே கண்டுபிடித்துத் தானாகவே அந்த ஏ.ஐ தன்னை முடக்கிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அப்டேட், விரைவில் சாட் ஜி.பி.டி ‘ப்ரோ’ மற்றும் ‘பிசினஸ் பிரீமியம்’ (Pro and Business Premium) சந்தாதாரர்களுக்கு அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News