LPG வாடிக்கையாளர்களே உஷார்!! இதை உடனே செய்யுங்கள்…

சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பயோமெட்ரிக் அடிப்படையிலான e-KYC சரிபார்ப்பு தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளன. அரசு வழங்கும் எல்பிஜி மானியம் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்வதுடன், போலி மற்றும் பயன்படுத்தப்படாத இணைப்புகளை கண்டறிந்து முறைகேடுகளைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

நாடு முழுவதும் இதுவரை சுமார் 90 சதவீத வாடிக்கையாளர்கள் e-KYC செயல்முறையை முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாடிக்கையாளர்களும் தங்களது எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள் மூலம் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

e-KYC செய்யாமல் இருப்பவர்களுக்கு மானியத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம். மேலும், மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர் பெற முடியாமல் சந்தை விலையில் வாங்க வேண்டிய நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோகத்திலும் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் நேரடியாக விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு சென்று ஊழியர்களின் உதவியுடன் e-KYC செய்யலாம். மேலும் IndianOil ONE, Bharatgas அல்லது HP Pay போன்ற செயலிகள் மூலமாகவும் சரிபார்ப்பை மேற்கொள்ள முடியும். சிலிண்டர் விநியோகிக்கும் ஊழியரிடம் தெரிவித்தாலும் e-KYC செய்ய உதவி கிடைக்கும்.

சமையல் எரிவாயு அத்தியாவசிய சேவை என்பதால், e-KYC முடிக்காதவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காலக்கெடு மற்றும் மானிய நிலை தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்திடம் உறுதி செய்து கொண்டு e-KYC-ஐ விரைவாக முடிப்பது பாதுகாப்பானது.

Related News

Latest News