நாளை முதல் ரேஷன் கார்டுகள் முடக்கம்!! இனி பொருட்கள் வாங்க முடியாது? முழுவிவரம் இதோ..

ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களை இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கி வருகின்றன. நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.5 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.

அரசின் சலுகைகள் தகுதியானவர்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய, ரேஷன் கார்டுகளில் உள்ள பயனாளிகளின் விவரங்கள் தொடர்ந்து சரிபார்க்கப்பட்டு வருகின்றன. ஒரே நபர் பல கார்டுகளில் இடம்பெறுவது, போலி கார்டுகள் வைத்திருப்பது மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது போன்ற முறைகேடுகளைத் தடுக்க, பயனாளிகளுக்கு கைரேகை பதிவு மற்றும் eKYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதுவரை 90.64 சதவீதம் பேர் கைரேகையை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக ரேஷன் பொருட்கள் பெறாத கார்டுகளை தற்காலிகமாக முடக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக சுமார் 1.58 கோடி பயனாளிகளின் சலுகைகள் அக்டோபர் 1 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்படும் கார்டுதாரர்களுக்கு தங்களது தகுதியை உறுதி செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும். இந்த காலத்திற்குள் eKYC முடித்து, கள ஆய்வில் தகுதி உறுதி செய்யப்பட்டால் ரேஷன் கார்டு மீண்டும் செயல்படுத்தப்பட்டு, அரசின் உணவுப் பொருள் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.

Related News

Latest News