சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்துள்ளது.
இதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,13,240-க்கும், ஒரு கிராம் ரூ.14,155-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 12-ந்தேதி தங்கம் ஒரு சவரன் ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.14,170-க்கும் விற்பனையானது. 14-ந்தேதி சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000-ஆகவும், 15-ந்தேதி மேலும் ரூ.680 குறைந்து ரூ.1,12,320-ஆகவும் இருந்தது.
16-ந்தேதி சவரன் ரூ.1,12,520-ஆக உயர்ந்த நிலையில், நேற்று ரூ.1,12,080-ஆக குறைந்தது. தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
இதேபோல், வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2 லட்சத்து 55 ஆயிரமாக உள்ளது.
தங்கம், வெள்ளி ஆகிய இரு உலோகங்களின் விலை உயர்ந்துள்ளதால், நகை வாங்கும் பொதுமக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
