தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்…

பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய பேராசிரியர் சாலமன் பாப்பையா (90), வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் இலக்கியம் மற்றும் பட்டிமன்ற உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி, தமிழின் சிறப்பையும் பழந்தமிழ் இலக்கியங்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரையும் எழுதியுள்ளார். அவரது தமிழ் சேவையைப் பாராட்டி தமிழக அரசு 2000ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கியது. மேலும், பட்டிமன்றத் துறைக்காக முதன்முறையாக பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 2021ஆம் ஆண்டு பெற்றார்.

அறிஞர்களுக்கு மட்டுமே இருந்த பட்டிமன்றத்தை பாமர மக்களிடமும் கொண்டு சென்ற அவர், எளிமையான நகைச்சுவை கலந்த அறிவார்ந்த பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். பாரதியின் கவிதைகள் முதல் கம்பனின் காவியம் வரை பல இலக்கியங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற சாலமன் பாப்பையாவுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related News

Latest News