தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்களுக்கு விலை உயர்வு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.14,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.880 அதிகரித்து ரூ.1,14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த திடீர் உயர்வு நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளிப் பார் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
