சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. கடந்த 1-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.14,175-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,400-க்கும் விற்பனையானது.
2-ந்தேதி விலை குறைந்த நிலையில், 3-ந்தேதி திடீரென உயர்ந்தது. தொடர்ந்து 4-ந்தேதியும் சவரனுக்கு ரூ.960 அதிகரித்தது. ஆனால் 5-ந்தேதி தங்கம் மீண்டும் விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.14,190-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,520-க்கும் விற்பனையானது. 6-ந்தேதி இதே விலை நீடித்தது.
இதையடுத்து, முன்தினம் ஒரு கிராம் ரூ.14,130-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,040-க்கும் விற்பனையானது. நேற்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,270-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,160-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கும், ஒரு கிராம் ரூ.14,145-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
