மாத கடைசியில் நகைப்பிரியர்களுக்கு நிம்மதி: தங்கம் விலை அதிரடி சரிவு…

கடந்த வாரம் தங்கத்தின் விலை தினமும் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அதிரடியாக உயர்ந்த நிலையில், தற்போது தொடர்ந்து சரிந்து வருகிறது.

ஒரு சவரன் தங்கம் ரூ.1.04 லட்சம் முதல் ரூ.1.08 லட்சம் வரை விற்பனையான நிலையில், திடீரென ரூ.1.20 லட்சத்தை எட்டியது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

எனினும், கடந்த வார இறுதியில் விலை குறையத் தொடங்கிய நிலையில், இன்றும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் கணிக்க முடியாத மாற்றங்கள், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் முதலீட்டாளர்கள் லாபத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகள் ஆகியவை தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

இன்றைய நிலவரப்படி, தங்கம் கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,370-க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,14,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News