நகை வாங்குவோருக்கு சூப்பர் நியூஸ்: தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி!!

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று பெரும் சரிவை சந்தித்துள்ளது. திங்கட்கிழமை தங்கம் விலை உயர்ந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சிறிய அளவில் குறைந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றம் இல்லை.

இன்று காலை தங்கம் விலை மீண்டும் குறைந்தது. ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,940-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது.

தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.14,725-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.355 வரையும், சவரன் விலை ரூ.2,280 வரையும் குறைந்துள்ளது. இந்த திடீர் விலை சரிவு நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் நகை வியாபாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனிடையே வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து மாறி வருவதால், நகை வாங்குவோர் சந்தை நிலவரத்தை கவனித்து வருகின்றனர்.

Related News

Latest News