பெண்களுக்கு அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பயணம்….

தமிழக சட்டசபை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ், வரும் பொங்கல் முதல் ஆண்டுக்கு மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். இதற்கான தொகையை அரசு நேரடியாக பயனாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும்.

மேலும், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது. ‘வெற்றி பயணம்’ எனப்படும் இத்திட்டம் அக்டோபர் 2 முதல் செயல்படுத்தப்படும்.

வருமான உச்சவரம்பு அல்லது பயண எண்ணிக்கை கட்டுப்பாடு இல்லாமல், பெண்கள் மாநகரம் மற்றும் நகரங்களில் இயங்கும் அரசு பேருந்துகள், டீலக்ஸ் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவசமாகப் பயணிக்கலாம்.

திருநங்கைகள் மற்றும் திருநர்களும் இத்திட்டத்தின் கீழ் கட்டணமின்றி பயணிக்கலாம். இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவிடப்படும்.

Related News

Latest News