நகைப்பிரியர்களுக்கு ஆறுதல்: தங்கம், வெள்ளி விலை சரிவு…

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.85 குறைந்து ரூ.14,205-க்கும், ஒரு சவரன் ரூ.680 குறைந்து ரூ.1,13,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உச்சத்தை நோக்கி நகர்ந்து வரும் தங்கத்தின் விலை, நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது.

இதனிடையே, ஆடி மாதம் நிறைவடைந்து சுபமுகூர்த்த தினங்கள் நிறைந்த ஆவணி மாதம் தொடங்கியுள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கத்தின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், வரும் நாட்களில் விலை மேலும் உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி விலையிலும் இன்று சரிவு காணப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான வெள்ளி, இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நகை வாங்குவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related News

Latest News