PF பணம் எடுப்பதில் புதிய விதிகள்: ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (PF) பணத்தை எடுப்பது தொடர்பாக மத்திய அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு ஊழியர் வேலையை விட்டு விலகிய பிறகு, முழுமையான PF தொகையைப் பெற 12 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

அதேபோல், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டமான EPS-ல் உள்ள தொகையைப் பெற 36 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும், அவசரத் தேவைகளுக்காக PF தொகையைப் பெறுவதில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. கணக்கில் உள்ள தொகையில் 75% வரை, காரணம் குறிப்பிடாமல், ஆண்டுக்கு இரண்டு முறை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வீடு கட்டுதல், மருத்துவ அவசரம், கல்விச் செலவு மற்றும் வேலையின்மை போன்ற தேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் தொழிற்சங்கங்கள், முதலாளிகள் மற்றும் மத்திய, மாநில அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு பரிந்துரைக்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது.

மேலும், PF பணத்தை விரைவாகப் பெறும் வகையில் டிஜிட்டல் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. EPFO 3.0 திட்டம் நடைமுறைக்கு வந்தால், UPI மற்றும் ATM மூலம் PF பணத்தை எளிதாகப் பெறும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கம், ஊழியர்களின் நீண்டகால ஓய்வுக்கால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.

Related News

Latest News